Latestமலேசியா

ஜன.12-13: கோலாலம்பூரில் உள்ள 20 இடங்களில் நீர் விநியோகத் தடை!

கோலாலம்பூர்,ஜன.11- நாளையும் நாளை மறுநாளும் கோலாலம்பூரில் உள்ள 20 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

புக்கிட் பிந்தாங், புக்கிட் சிலோன், கம்போங் டத்தோ கெராமாட், புடு, சாவ் கிட், தாமான் டூத்தா ஆகிய இடங்களில் உள்ள 20 பகுதிகளி இந்த தடை ஏற்படும் என்று சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனமான ஷாபாஷ் கூறியுள்ளது.

மேல் விவரங்களுக்கு, பொதுமக்கள் ஷாபாஷின் அகப்பக்கமான www.syabas.com.my-ஐ வலம் வரலாம். அல்லது, அதன் பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களிலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும், 15300 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker