Latestஇந்தியா

‘திரும்பிப் போ’: விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு

மும்பை, ஜன.11- இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அவமதித்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

மதுரையைச் சேர்ந்தவர் ஆபிரகாம் சாமுவேல் (வயது 27). இவர் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.எச்.டி படித்து வருகிறார்.

விடுமுறைக்காக மதுரை சென்றிருந்த அவர், மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

பின்னர் விசா பெறுவதற்காக அங்குள்ள 33 ஆவது கவுண்டருக்கு சென்ற ஆபிரகாம் சாமுவேல் குடிநுழைவு அதிகாரியிடம் விசா தொடர்பான விவரங்களை ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி சாமூவேலுவிடம் இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது தனக்கு இந்தி தெரியாத எனக் கூறிய சாமுவேல் ஆங்கிலத்தில் பேசுமாறு அதிகாரியை பணித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குடிநுழைவு அதிகாரி, ‘இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பிப் போ’ என சாமுவேலுவிடம் கூறியுள்ளார். மேலும் அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக விசா வழங்கப்பட்டு விமானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற சாமுவேல் தனக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டார். அந்தப் பதிவுகளை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட குடிநுழைவு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சாமுவேலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. குறிப்பாக அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker