Latestமலேசியா

நிந்தனைப் பேச்சு: லொக்மான் அடாம் கைது!

கோலாலம்பூர், ஜன.11-சட்ட விரோதக் கூட்டம் மற்றும் நிந்தனை பேச்சுக்கள் ஆகியவை குற்றச்சாட்டுக்களின் பேரில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் அடாம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரது நிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் தலைமையகமான புக்கிட் அமான் அவரை அழைத்திருந்தது. அவர் நேற்று புக்கிட் அமானுக்கு வந்திருந்த போது அவரைப் போலீசார் கைது செய்தனர்.

பெமாந்தாவ் மலேசியா பாரு என்ற இயக்கத்தின் தலைவரான லொக்மான் அடாம், இன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவரை விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்க போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெறுவார்கள் எனத் தெரிகிறது.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4(1) ஆவது பிரிவின் கீழ் லொக்மான் அடாம் விசாரிக்கப் படுவார் என்று கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker