Latestமலேசியா

பள்ளிகளில் பாலியல் கல்வி: விபரங்கள் ஆராயப்படும்! -ஹன்னா

கோலாலம்பூர், ஜன.11- மாணவர்களில் பலர் பாலியல் ரீதியில் செயலாற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்திருப்பதால் பாலியல் கல்வியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து இரண்டு அமைச்சுகள் கலந்து விவாதிக்கவுள்ளன.

உத்தேசப் பாலியல் கல்விப் பாடத்திட்டம் தொடர்பில் விபரங்களை ஆராய்வதற்காக கல்வித்துறை துணையமைச்சரைத் தாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

ரிமூவ் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 9 விழுக்காட்டினர் பாலியல் திறன் உள்ளவர்கள் என்ற தகவல் நமது கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. தாய்மொழிப்பள்ளிகளைச் சேர்ந்த சிலருக்கான வகுப்பாக இந்த ரிமூவ் வகுப்பு அமைந்துள்ளது.

13 வயதுடைய இந்த மாணவர்கள், ஆரம்பப் பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்கு மாறும் இடைத் தருணத்தில் இருப்பவர்கள் என்று துணையமைச்சர் ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

பாலியல் கல்விப் பாடம் என்பது எடுத்த எடுப்பிலேயே நேரடியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் படாது என்றும் அதன் விபரங்கள் முறையாக ஆராயப்பட சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதன் மீது விவாதிக்கவுள்ளோம். இது மாணவர்கள் மத்தியில் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இத்தகைய கல்வியை நாம் விலக்கி வைத்துக் கொண்டே போகும் மாயையில் இருந்து விடுபட்டாக வேண்டும். இந்த பாலியல் கல்வியை நாம் நமது பிள்ளைகளுக்கு போதிக்காமல் விட்டு விடுவோமேயானால், வேறு யாராது அதனைச் செய்வார்கள், அதுவும் தப்பாக போதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றார் ஹன்னா இயோ.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker