Latestஇந்தியா

பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டிப்பு; குடிபோதை தாதிகள் தலைமறைவு!

ஜெய்ப்பூர், ஜன.11- ராஜஸ்தான் மாநிலம் ராம்காரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது மனைவி தீஷா கன்வர். இவர் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, ராம்காரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தனர்.

அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் நிகில் சர்மா அப்போது கடமையில் இல்லை. பெண் தாதிகளும் இல்லை. ஆதலால், இரு ஆண் நர்சுகள் இருந்தனர். அவர்களில் அமிர்த்லால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தின் போது குழந்தையின் தலை தான் முதலில் வருவது வழக்கம்.

ஆனால் இந்தப் பெண்ணுக்கு குழந்தையின் கால் முதலில் வெளிவந்தது. இதனால் பிரசவமாவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இரண்டு ஆண் தாதிகளும் குழந்தையின் காலை பிடித்து இழுத்துள்ளனர்.

இவ்வாறு மிக அழுத்தமாக இழுத்ததால் குழந்தையின் தலை துண்டாகிவிட்டது. தலை மட்டும் வயிற்றுக்குள் இருக்க உடல் மட்டும் வெளியே வந்தது. அந்த இரு ஆண் தாதிகளும் குடிப்போதையில் இருந்ததாக தெரிகிறது.

தலை துண்டாகி வயிற்றுக்குள் இருந்ததால் தீஷாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் ஜெய்சல்மாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உண்மை விவரத்தை வெளியில் சொல்லவில்லை. நஞ்சுக்கொடி வெளியே வராமல் வயிற்றுக்குள் இருக்கிறது என்று கூறி மழுப்பினர்.

பின்னர் தலை துண்டாகி வயிற்றுக்குள் தலை இருக்கும் விஷயத்தை ஜோத்பூர் பெரிய மருத்துவமனையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவம் பார்த்த இரு ஆண்கள் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker