Latestமலேசியா

புதிய மாமன்னர் பற்றி ஆரூடம்; பகாங் அரச மன்றம் கூடியது!

கோலாலம்பூர், ஜன.11- உடல் நலம் குன்றியிருக்கும் பகாங் சுல்தான் அகமட் ஷாவுக்குப் பதிலாக புதிய சுல்தானாக பகாங் பட்டத்து இளவரசர் துங்கு அப்துல்லா பொறுப்பு ஏற்கக் கூடும் என்ற ஆரூடங்களுக்கு இடையே மாநில அரச மன்றத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சந்திப்பு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்களை வரவேற்ற துங்கு அப்துல்லா, ‘நல்லதே நடக்கட்டும் என்று பிரார்த்திப்போம்” என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தச் சந்திப்புக் கூட்டம் பிற்பகல் 4 மணியளவில் தொடங்கியது.

இந்தச் சந்திப்பில் பேசப்படவிருக்கும் அம்சம் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் அண்மையில் மாமன்னர் பொறுப்பில் இருந்து கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மட் விலகிக் கொண்ட நிலையில் அடுத்த மாமன்னர் நியமனம் குறித்து பரவலாக பேசப்படுகிறது.

அடுத்த மாமன்னருக்கான அரச வரிசையில் 88 வயதுடைய பகாங் சுல்தான் அகமட்ஷா இருக்கிறார் என்றாலும் அவர் நலம் குன்றி இருப்பதால் அடுத்த சுல்தானாக பகாங் ரீஜெண்ட் துங்கு அப்துல்லா பொறுப்பேற்ற பின்னர், மாமன்னர் பதவியை ஏற்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker