Latestமலேசியா

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?- இந்து சங்கம் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜன.11- இயற்கைக்கும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் திருநாள் தான் பொங்கல் பண்டிகை.

பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம் தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வருவது நமது மரபாகும்.

பொங்கல் விழா நான்கு நாட்கள் அதாவது போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூசை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த ஆண்டு சிறப்புமிகு தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலை ஜனவரி 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாம் கொண்டாடவிருக்கிறோம்.

சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம், மலேசிய நேரப்படி காலை 7.30 மணி முதல் 10.25 மணி வரையாகும். அன்றைய தினம் பலருக்கு வேலை நேரமாக இருப்பதால் மாலையில் 6 மணி முதல் 7.25 மணி வரை பொங்கல் வைக்கலாம்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் மகாகவி பாரதி. எனவே, இயற்கைக்கு நன்றி கூறும் அதே வேளையில், நம் உறவினர்களோடும் சுற்றத்தார்களுடனும் மகிழ்ச்சியாகவும் நல் சிந்தனையோடும் இந்த திருநாளைக்
கொண்டாடுவோம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker