Latestமலேசியா

மனித வள நிதியத்தில் போலீஸ் அதிரடிச் சோதனை!

கோலாலம்பூர், ஜன.11- டமான்சாரா ஹைட்சிலுள்ள மனித வளத்துறை மேம்ம்பாட்டு நிதியத்தின் (HRDF) முதன்மை அலுவலகத்தில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.

மேம்பாட்டு நிதியத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் இதர ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் ஒரு பகுதியே இந்தப் போலீஸ் சோதனை என்று நம்பப்படுகிறது.

எச்.ஆர்.டி.எப். ஊழியர்கள் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நண்பகலில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களையும் போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.

மொத்தம் 300 மில்லியன் ரிங்கிட் கொண்ட இந்த நிதியத்தில் இருந்து எச்.ஆர்.டி.எப். இன் உயர் அதிகாரி ஒருவர் 100 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு செய்திருப்பதாக கடந்த நவம்பர் மாதத்தில் மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடந்த பல்வேறு முறைகேடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், நம்பிக்கை மோசடிகள் மற்றும் இயக்குனர் வாரியத்திற்குத் தெரிவிக்காமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டது போன்ற பல அம்சங்களை குலசேகரன் அம்பலப்படுத்தி இருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker