Latestமலேசியா

மேண்டரின் ஆரஞ்சுப் பழம் விலை குறைந்தது!

ஜோர்ஜ் டவுன்,ஜன.11- இந்த சீனப் புத்தாண்டுக்கு, மேண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் விலைக் குறைவாக மட்டும் கிடைக்கப் போவதில்லை; அவை பெரிதாகவும், இனிப்பாகவும், கூடுதல் சுவையுடன் கிடைக்கப்போவதாக கூறப்படுகிறது.

சீனாவில் இம்முறை அதிகளவிலான மேண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் காய்த்துள்ளன. அதனால் தான் அந்தப் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருவதாக பினாங்கு, பாயான் பாருவிலுள்ள “ஷன்சைன் ஹோல்சேல் மார்ட்” பழக் கடையின் நிர்வாகி யீ காம் மிங் தெரிவித்தார்.

கடந்தாண்டைக் காட்டிலும் 20 விழுக்காட்டு கூடுதலாக அப்பழங்கள் காய்த்துக் குலுங்கியுள்ளன. அதை அடுத்து அவற்றின் விலையோ 10-இல் இருந்து 15 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆரங்சுப் பழங்கள் 70 மில்லிமீட்டர் வரையில் பெரிதாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

4 கிலோகிராம் பெட்டி 12 ரிங்கிட் 80 சென்னில் இருந்து 19 ரிங்கிட் வரை விற்கப்படுகின்றதாம். பழங்களின் அளவு பொருத்து விலை மாறுபடுமாம்.

S அளவு பழம் 12 ரிங்கிட் 80 சென்னுக்கு விற்கப்படுகிறத்ய். கடந்தாண்டு 13 ரிங்கிட் 68 சென்னுக்கு விற்கப்பட்டது. மாறாக, M அளவு பழம் 13 ரிங்கிட் 80 சென்னுக்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு, 16 ரிங்கிட் 68 சென்னுக்கு விற்கப்பட்டதாம்.

மேலும், கடந்தாண்டு முறையே 20 ரிங்கிட் 88 சென்னுக்கும், 23 ரிங்கிட் 88 சென்னுக்கும் விற்கப்பட்ட L, XL அளவு பழங்கள் இம்முறை 16 ரிங்கிட் 80 சென்னுக்கும், 19 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுகின்றனவாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker