Latestசினிமா

‘விஸ்வாசம்’: அமர்க்களம் கண்டு, அசந்து போன போனி கபூர்

சென்னை, ஜன.11- அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தை ரசிகர்கள் படு அமர்க்களமாக வரவேற்று விட்டார்கள். எங்கு திரும்பினாலும் விஸ்வாசம் படம் பற்றிய பேச்சு தான். படத்தயாரிப்பாளர் போனி கபூரை இந்தக் கொண்டாட்டங்கள் மிரசலாக்கி விட்டன.

கட் அவுட்,பேனர், பால் அபிஷேகம்,வெடி,,பட்டாசுகள் என கொண்டாட்ட வீடியோக்கள் அனைத்திலும் ‘விஸ்வாசம்’ தான். இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து முதன் முதலாக பார்த்துள்ளார் அஜித்தின் 59 ஆவது ந்த் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்த கொண்டாட்டங்களை பார்த்த அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “நான் இது போல் ஒரு கொண்டாட்டத்தை திரையரங்கில் பார்த்ததே இல்லை. பெரிய திருவிழா போல் உள்ளது. இது எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

அதோடு “பிங்க்” ரீமேக் எனது மனைவி ஸ்ரீதேவியின் விருப்பம். அதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து மறைந்த ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியே என அவர் பேசியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker