Latestமலேசியா

4,000 கல்லறைகளைத் தோண்டும் சிங்கப்பூர் அரசு! ஆவிகளை விட்டு விடுங்கள்!

சிங்கப்பூர், ஜன.11- சிங்கப்பூர் அரசாங்கம் எட்டு வழிச்சாலை ஒன்றை அமைப்பதற்காகவே 4,000 கல்லறைகளைத் தோண்ட முடிவு செய்துள்ளதுயிதற்கு சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆவிகளை நிம்மதியாக தூங்க விடுங்கள் என்பது தான் ஆவிகளின் சார்பில் அவர்கள் விடுக்கும் கோரிக்கையாகும்.

புக்கிட் பிரவுன் என்னும் இடுகாட்டில் சுமார் 100,000 கல்லறைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முன்னர் புலப் பெயர்ந்த சீன மக்களுடையவை. அத்துடன் இரண்டாம் உலகப்போரின் போது குடியேறி ஜப்பானியர்களின் முக்கிய புனிதத் தலமாகவும் அது கருதப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த இடுகாட்டில் இறந்தவர்களை புதைப்பது நிறுத்தப்பட்டாலும் இன்னும் பலர் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளைச் சென்று பார்த்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஆனால், அந்த வழக்கமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் புக்கிட் புரவுன் இடுகாடு அகற்றப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன.

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டு வாக்கில் அதன் மக்கள் தொகை 6.9 மில்லியைனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களை தங்க வைப்பதற்கு இடம் போதாமல் தவிக்க்கும் நிலை உருவாகவிருக்கிறது.

தீவு நாடான சிங்கப்பூர், அலுவலகங்களையும் -குடியிருப்பையும் அமைப்பதற்கு தனது சேமிப்பகங்கள் மற்றும் போக்குவரத்தில் பெரும் பகுதியை பூமிக்கடியில் மாற்றத் திட்டம் தீட்டி வருகிறது.

இதற்கு முன் வீடுகளுக்காகவும் நெடுஞ்சாலைகளுக்காகவும் ஏராளமான கல்லறைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், பாரம்பரியமிக்க இந்த கல்லறைகள் அகற்றப்படக்கூடாது என்று பல அமைப்புகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பாரம்பரியம் முக்கியமானது தான் என்றாலும் வாழ்வதற்கு வீடுகளும் தேவை என்பதால் அதற்கேற்றாற் போல் முடிவெடுக்கப் படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனர்களை பொறுத்தவரையில் முறையாக அடக்கம் செய்யப்படாதவர்களின் ஆவிகள் அலைந்து திரியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் என்பதால் எப்படியாவது கல்லறைகளை அகற்றுவதற்கு பதிலாக ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker