Latestமலேசியா

களைக் கட்டியது கேமரன் மலை வேட்புமனுத் தாக்கல்!

கேமரன் மலை,ஜன.12- இன்று கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல். காலையிலேயே தானா ராத்தாவில் அந்தந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுத் திரண்டதால் வேட்புமனுத் தாக்கல் களைக் கட்டியது.

காலை 8 மணிக்கெல்லாம் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் வேட்புமனுத் தாக்கல் நடக்கும் சுல்தான் அகமட் ஷா இடைநிலைப்பள்ளியில் திரண்டனர். அவர்கள் “தேசிய முன்னணி வாழ்க!” என்று உற்சாகத்துடன் கோஷம் எழுப்பியவாறே இருந்தனர்.

அம்னோ, மசீச, மஇகா கட்சியினருடன் பாஸ் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தேசிய முன்னணி சார்பில் இந்தத் தேர்தலில் குதிக்கும் ரம்லி முகமட் நோருக்கு ஆதரவு வழங்க வந்திருந்தனர்.

அதே சமயம், பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களும் தானா ராத்தா பேருந்து முனையத்தில் ஒன்று கூடினர். செந்நிற சட்டையில் அணிந்து அவர்கள் மிக உற்சாகமாகக் காணப்பட்டனர்.

காலை 8.45 மணிக்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் முன்னே நடக்க அவரைத் தொடந்து ஆதரவாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் மையத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்களுடன் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகியோரும் இருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker