Latestமலேசியா

கேமரன் மலையில் 4 முனைப் போட்டி!

கேமரன் மலை,ஜன.12- கேமரன் மலையில் இன்று காலை 10.00 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த வேளை, அத்தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டியைக் போட்டி நிலவுவதாக அறிவிக்கப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பானை பிரதிநிதித்து ஏற்கெனவே அத்தொகுதியில் போட்டியிட்ட ஜசெகவின் எம்.மனோகரனே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மஇகாவின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கும் கேமரன் மலையை இம்முறை அக்கட்சி அம்னோவிடம் பறிகொடுத்தது. தேசிய முன்னணியின் சார்பில் இம்முறை ரம்லி முகமட் நோர் என்ற ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார்.

மாறாக, இவர்களுக்கு போட்டியாக வோங் சேங் யீ, சலேஹுடின் அப்துல் தலிப் என்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

கேமரன் மலையில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருந்த டான்ஶ்ரீ கேவியஸ் கடைசி நேரத்தில் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்தார் என்பத் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker