Latestமலேசியா

சாலையோர ‘பார்க்கிங்’: சம்மன் கட்டிய கோலாலம்பூர் மேயர்!

கோலாலம்பூர், ஜன.12- தன்னுடைய சொந்தக் காரில் உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காக சென்றிருந்த போது போக்குவரத்துக் குற்றத்திற்காக தமக்கு சம்மன் அளிக்கப் பட்டதாகவும் அந்த சம்மனுக்கான அபராதத்தை தாம் உடனே செலுத்தி விட்டதாகவும் கோலாலம்பூர் மேயர் டத்தோ நோர் ஹிஷாம் அகமட் தெரிவித்தார்.

அமலாக்க அதிகாரி ஒருவர் தமக்கு இந்த சம்மனை வழங்கியதாகவும் சட்ட அமலாக்கம் என்று வரும் போது யாருக்கும் விதிவிலக்கில்லை என்றும் அவர் சொன்னார்.

உறவினர் ஒருவரைச் சந்திக்க இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றுக்குச் சென்றிருந்த போது கடுமையாக மழை பெய்தது கொண்டிருந்தது என்றும் தாம் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததால் தம்முடைய காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் மேயர் டத்தோ நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

திருப்பி வந்து பார்த்த போது காரில் சம்மன் இருந்தது. அபராதத் தொகையாக 30 ரிங்கிட்டை அன்றைக்கே செலுத்திவிட்டதாக அவர் கூறினார்.

”என்னைப் பொறுத்தவரை இந்த சம்மன், எனக்கும் சரி, எனது ஊழியர்களுக்கும் சரி ஒரு பாடமாகும் யாரும் தவறிழைக்க முடியாது. யாரும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்பதையே இது அறிவுறுத்துகிறது என்று தாம் மேயராக பதவியேற்ற 100ஆவது நாளை முன்னிட்டு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker