Latestசினிமா

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது: மாட்டு வண்டியில் அமிதாப் பச்சன்

மும்பை, ஜன.12 இந்திப் படவுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், மாட்டு வண்டியில் பயணம் செய்யும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கிராமத்து சூழலில் வாழ வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறி இருப்பதாக கூறி சாதாரண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதோடு கட்டிலில் உறங்குவது, பஸ்சில் பயணம் செய்வது போன்ற படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த படங்களின் கீழ் நீண்ட காலமாக கிராமத்து சூழலில் வாழ வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. இது இப்போது நிறைவேறி இருக்கிறது என மகிழ்ச்சியோடு அனுபவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 650 கோடி அசையும் சொத்துக்களும் 460 கோடி ஆசையா சொத்துக்களும் உள்ளன.
சொந்தமாக டஜன் கணக்கில் கார்கள் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்கள் வைத்துள்ளர். மனைவி ஜெயபச்சனுக்கு 1,000 கோடி சொத்துக்கள் உள்ளன.

அமிதாப் நடித்து சமீபத்தில் “தக்ஸ் ஆப் இந்துஸ்தான்” படம் வெளியானது. இப்போது ஜூன்ட் என்ற இந்தி படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். இதனிடையே  மகராஷ்டிராவுக்கு வருகை மேற்கொண்டிருந்த போது இந்த மாட்டு வண்டி ஆசை நிறைவேறியதாகவும் மாட்டு வண்டியிலும் பஸ்சிலும் அமிதாப்  பயணம் செய்ததாகவும்  கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker