Latestஇந்தியா

பிரிட்டீஷ் அரசியாரை விட பணக்காரரா இவர்?

லண்டன், ஜன.12- பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத்தை விட சோனியா காந்தி பணக்காரர் என ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்து தொடர்பாளர் அஸ்வினி உபத்யாயா பிரபலமான நாளிதழ் ஒன்றில் கட்டுரை பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸின் எலிசபெத் சோனியா காந்தி, பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத்தை விட பணக்காரர். அவரின் நூறு சதவிகித முறைகேடான சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.

இதை அவர் பிரதமர் மோடிக்கு அலுவலக டுவிட்டர் கணக்கிற்கு டேக் செய்திருந்தார். அதன் பின் டில்லி பாஜக சமூக ஊடக தலைவர் புனித் அகர்வாலாவும் இந்த டுவிட்டை பகிர்ந்துள்ளார். அதில் முறைக்கேட்டைத் தவிர காங்கிரஸூக்கு வேறு எப்படி வருவாய் வந்திருக்க போகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker