Latestசினிமா

பொய் தகவல்களை தடுக்க தீபிகா தனி இணையத் தளம்!

மும்பை, ஜன.12 பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் தன்னைப் பற்றிய பொய்த் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க விருக்கிறார்.

ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன் தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஆனால் சரியான கதைகள் அமையவில்லை.

கணவர் ரன்வீர்சிங் நடிக்கும் 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் நடிக்கிறார்.

திருமணமாகி விட்டதால் இனி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது என்பது அரிதான ஒன்று என்பதை புரிந்து கொண்ட தீபிகா அடுத்த கட்டமாக தனக்காக ஒரு தனி இணையத்தளம் ஒன்றை தொடங்க உள்ளார்.

தன்னைப் பற்றி நிறைய பொய் தகவல்கள் வருவதால் இந்த இணையதளத்தை தொடங்க உள்ளதாக கூறும் அவர் இதில் தன்னைப்பற்றி முக்கிய தகவல்களை வெளியிட இருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker