Latestசினிமா

11 ஆண்டுக்கு முந்திய ‘துளசி’ படத்தின் சுட்ட கதையா ‘விஸ்வாசம்’?

சென்னை, ஜன.12- சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் பற்றி திடுக்கிடும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தெலுங்குப் படமான ‘துளசி’யில் இருந்து ‘சுட்ட கதை’ இது என்று இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

விஸ்வாசம் படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தின் கதை பற்றி எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை. அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளிவந்தன.

படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சில தெலுங்கு ரசிகர்கள் விஸ்வாசம் படம் படம் 2007ஆல் வெளிவந்த ‘துளசி’ தெலுங்குப் படம் போல இருப்பதாக சொன்னார்கள்.  அந்தப் படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரு மகனும் பிறக்கிறான்.

ஆனால், வெங்கடேஷின் குடும்பம் சொந்த ஊரில் அடிதடி பஞ்சாயத்து பிரச்சனை என இருக்கும் குடும்பம். அதில் வெங்கடேஷூம் ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது நயன்தாராவுக்குத் தெரிய வருகிறது.

ஒரு சண்டையில் நயன்தாராவின் சகோதரர் கொல்லப்பட தன் மகனை அழைத்துக்கொண்டு பிரிகிறார். மருத்துவ ரீதியாக மகனுக்கு பிரச்சனை இருக்கிறது. அவனது உயிரைக் காப்பாற்ற போராடுகிறார் வெங்கடேஷ்.

துளசி படத்தின் கதையே சில பல இந்தி, தெலுங்குப் படங்களின் காப்பி என அப்போது பேசப்பட்டது. அந்த துளசி கதையிலிருந்து ‘தூக்குதுரை’ கதாபாத்திரத்தையும். அப்படத்தில் நயன்தாராவின் வசுந்தரா கதாபாத்திரத்திலிருந்து நிரஞ்சனா கதாபாத்திரத்தையும் உருவாக்கி விஸ்வாசம் என உருவாக்கிவிட்டார் சிவா.

‘துளசி’யில் மகன், விஸ்வாசத்தில் அது மகள் என மாற்றப்பட்டுள்ளது என்பதும் அதில் வெங்டேஷ் படித்தவர். இதில் அஜித் படிக்காதவர் என்பது மட்டும் தான் வித்தியாசம் .

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker