Latestஇந்தியா

2021-இல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இந்தியா திட்டம்!

பெங்களூரு, ஜன.12- எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும். சுமார் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகமாக ‘ இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மைய இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2018 ஆம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன.

இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். “உன்னதி” திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.

இதில் ‘நானோ’ செயற்கோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை வருகிற 17 ஆம் தேதி மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார். ரூ. 30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி பி.எஸ்.எல்.வி ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ. 10 கோடி ஆயிரம் புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ. 30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்தற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது இஸ்ரோ வரலாற்றில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இத்திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையம் அமைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker