Latestமலேசியா

DBKL-இன் வாகன கிடங்கில் தீ; 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை!

கோலாலம்பூர்,ஜன.12- ஜாலான் சான் சோவ் லின்னில் உள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாகனங்களை வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 100-லிருந்து 150 கார்கள் தீக்கிரையாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

தீ சம்பவம் குறித்து காலை 2.08 மணிக்கு தகவல் கிடைத்ததும், நான்கு தீயணைப்பு வண்டிகளுடன் 57 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புபுத் துறை நடவடிக்கைப் பிரிவின் தலைவர் முகமட் ஹப்பிட்ஸ் யாக்கோப் தெரிவித்தார்.

தீயை அணைக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாகவும், விடியற்காலை 4.53 மணி அளவில்தான் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker