Latestஉலகம்

அடுத்து 50 ஆண்டுகளுக்கு உலகின் ‘சூப்பர் மாடல்’ யார் தெரியுமா?

தோக்கியோ, ஜன.13- அடர்த்தியான தலை முடியுடன் ‘பொக்கை’ வாய் சிரிப்புடன் திகழும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு குழந்தை சூப்பர் மாடலாகி ஆகியிருக்கிறாள்.

ஜப்பானில் வாழும் பேபி சண்கோ பிறக்கும் போதே நிறைய தலைமுடியுடன் பிறந்தாள். அவள் பிறந்ததும் இன்னும் அதிகமாக அவள் தலையில் முடி வளர ஆரம்பித்தது. அந்த அழகு தலை முடியுடன் கூடிய அவளது புகைப்படங்களை வாரத்திற்கு ஒரு முறை சமூக ஊடகங்களில் வெளியிடுவார் சண்கோவின் தாயார்.

வெளியிடும் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது 10,000 ‘லைக்கு’களாவது கிடைக்கும். இந்நிலையில் இணையத்தில் பிரபலமான சண்கோவின் புகழைக் கண்ட பென்டின் ஷாம்பூ நிறுவனமொன்று ஜப்பானில் தனது விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்தது. செய்தது.

தற்போது ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் சடோ கொண்டோ என்னும் அறிவிப்பாளர் ஒருவருடன் பேபி சண்கோவும் தோன்றுகிறார். இப்போதே இவ்வளவு பிரபலமாகிவிட்ட பேபி சண்கோவைப் பார்த்தால் இன்னும் 50 வருடங்களுக்கு அவரை மிஞ்ச வேறொரு மாடல் வர முடியாது என்று மாடல் உலகத்தில் விமர்சனங்கள் கிளம்பி விட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker