Latestஉலகம்

கணவரின் விவாகரத்தால், மனைவி உலக மகா கோடீஸ்வரி ஆனார்!

வாஷிங்டன், ஜன.12- அமேசோன் நிறுவனர் ஜெஃப் பெஸோஸை விவகாரத்து செய்வதன் மூலம் அவரது மனைவி மெக்கன்சி உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண் ஆகியிருக்கிறார்.

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஜெஃப் பெஸோஸ் (வயது 54). இவருக்கும் மெக்கன்ஸி (வயது 48) என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். உலகின் முன்னணிப் பணக்காரராக திகழ்கிறார் ஜெஃப் பெஸோஸ். இவரது சொத்து மதிப்பு 13,400 கோடி டாலர் என மதிப்பிடப்படுகிறது.

இப்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் இவர், தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இந்த முடிவை இரண்டு பேரும் சம்மதத்துடன் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கன்ஸி இருவரும் விவகாரத்து செய்து கொள்வதாக அறிவித்துள்ளதால் இதன் மூலம் அமேசோன் நிறுவனத்தில் ஜெஃப் பெஸோஸ் வைத்திருக்கும் பங்கில் பாதி சட்டப்படி மனைவி மெக்கன்ஸிக்கு சொந்தமாகும்.

இதனால் உலகின் முதல் பணக்காரப் பெண் என்ற இடத்தை மெக்கன்ஸி பிடிப்பார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.
எனவே பங்குகளில் பாதியளவு மனைவி மெக்கன்ஸிக்குக் கொடுக்கப்படும் பட்சத்தில் 6,800 கோடி டாலர் சொத்துக்கு மெக்கன்ஸி உரிமையாளராவார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண்ணாக அவர் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker