Latestமலேசியா

மோட்டார் ஓட்டிகளுக்கு இடதுபுறத் தடம் மட்டுமே! கட்டுப்பாடு வருமா?!

கோலாலம்பூர், ஜன.13- மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் குறிப்பாக, சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், சாலையின் இடதுபுற வழித்தடத்தில் மட்டுமே ஓடவேண்டும்என்ற கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை ஆராய்ந்து வருகிறது.

சாலை விபத்து மரணங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பது குறித்து ஆராயப்படுகிறது என்று சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குனர் ரோஸ்லி இசா கூறினார்.

விபத்துக்களை குறைக்க, ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா
ஆகிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கென இடது புறச் சாலை வழித்தடம் ஒதுக்கப் பட்டிருப்பது குறித்து ஒப்பீடு செய்து ஆராயப்படும் என்றார் அவர்.

கடந்த 2018 ஆண்டின் புள்ளி விபரப்படி 6,742 சாலை விபத்து மரணங்களில் 60 விழுக்காடு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

150 சிசி சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதற்கு குறைந்த சிசி கொண்ட மோட்டார் கைக்கிள்களுக்கு மணிக்கு 70 கிலோமீட்டர் என வேகக் கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிலான விபத்துக்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளின் வேகமும் முக்கிய காரணம் என்றும் ரோஸ்லி இசா விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker