Latestஉலகம்

உலக வங்கிக்கு மகளை தலைவராக்க டிரம்ப் முயற்சி?

வாஷிங்டன், ஜன.14- உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மகளான இவங்கா நியமிக்கப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதியோடு பதவி விலகப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவங்கா டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க ஐநா தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கக் கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன.

தகுந்த நபரை தெரிவு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இணைந்து பணியாற்ற உள்ளோம் எனத் தெரிவித்தார்.

இரண்டாவது உலகப் போரின் நிறைவில் ஆரம்பிக்கப் பட்ட உலக வங்கியில் அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர்.

உலக வங்கியில் அமெரிக்கா மிகப் பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இதனால் டிரம்ப் தனது சொந்த விருப்பின் பேரில் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை பெற்ருள்லார். அவர் தனது மகள் இவாங்காவை பரிந்துறை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker