Latestமலேசியா

கேவியஸ்- மெக்லின் மோதல்: மைபிபிபி கட்சிப் பதிவு ரத்து!

கோலாலம்பூர், ஜன.14- இரண்டு தரப்புகளுக்கு இடையே தலைமைத்துவ உரிமைப் போராட்டம் நடந்து வந்த நிலையில் மைபிபிபி கட்சியின் பதிவு ரத்தாகி இருப்பதாக சங்கங்களுக்கான பதிவகம் அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுக்கும் பதிவு ரத்து தொடர்பாக அறிவிக்கும் கடிதம் அனுப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

மைபிபிபி கட்சி தற்போது பிளவு பட்டுள்ளது. ஒரு தரப்புக்கு முன்னாள் துணையமைச்சர் எம். கேவியஸ் தலைமை வகிக்கிறார். கட்சி இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

மேலும் கேமரன்மலை இடைத்தேர்தலில் தமது கட்சி பக்காத்தான் ஹராப்பனை ஆதரிக்கும் என்று சில தினங்களுக்கு முன்னர் அவர் அறிவித்தார்.

அதே வேளையில், மைபிபிபியின் மற்றொரு பிரிவுக்கு முன்னாள் துணையமைச்சர் மெக்லின் டிகுரூஷ் தலைமையேற்றுள்ளார். மைபிபிபி தொடர்ந்து தேசிய முன்னணியின் நட்புக் கட்சியாகவே செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே கட்சியின் பதிவு ரத்தாகி இருப்பதை மெக்லின் தரப்பு பொதுச் செயலாளர் சைமன் சபாபதி உறுதிப்படுத்தினார். கட்சியின் சொத்து விவகாரம் திவால் விவகாரப் பிரிவின் வசம் செல்லும் என்று கூறப்பட்டது.

கட்சியின் சொத்து விவகாரங்கள் எவ்வாறு தீர்க்கப்படவுள்ளன. என்பதுதொடர்பில் தாங்கள் திவால் விவகாரப் பிரிவுடன் தான் பேசவேண்டியிருக்கும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker