Latestமலேசியா

தமிழ்ப்பள்ளி பிரச்னைகள்: ஒவ்வொன்றாக களையப்படும்! -தியோ

கூலாய், ஜன.14- கடந்த இரு வாரங்களுக்கு முன், இவ்வாண்டுக்காக பள்ளித் தவணை தொடங்கப் பட்ட நிலையில், நாட்டிலுள்ள 16 தமிழ்ப்பள்ளிகள் இதுவரை திறக்கப் படாத பிரச்சனை குறித்து கல்வி அமைச்சு நடவடிக்கும் என்று துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

அப்பள்ளிகளுக்கு சி.எஃப். எனப்படும் சான்றிதழ் வழங்கப் படாததற்கு வெவ்வேறு காரணங்கள் இருப்பதால், அப்பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக களையப் படும் என்று அவர் பதிலளித்தார்.

“அப்பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுமானப் பணிகள் முழுமையடைந்துள்ள வேளையில், அப்பள்ளிகளுக்கு ஏன் சி.எஃப். சான்றிதழ்கள் வழங்கப் படவில்லை என்பது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

“கூலாய் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், கூலாய் மாநகரக் கழகம் நிர்ணயித்துள்ள தேவைகளை அப்பள்ளி பூர்த்தி செய்யாததால், அப்பள்ளிக்கு அந்தச் சான்றிதழ் வழங்கப் படவில்லை. அதன் தொடர்பில், நாங்கள் அந்த மாநகரக் கழகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என்று தியோ சொன்னார்.

“பொதுப் பணி துறை, மாநகர மற்றும் நகராண்மைக் கழகத்துடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு, அப்பள்ளிகளின் பிரச்னைகளைக் களைய நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள 16 தமிழ்ப்பள்ளிகள் இதுவரை திறக்கப் படவில்லை என்று அண்மையில் தகவல்கள் வெளியாகின. ஜொகூர் மாநிலத்தில் மட்டுமே 4 தமிழ்ப்பள்ளிகள் இதுவரை திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker