Latestஇந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்

புதுடில்லி. ஜன 14- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்சாய் குமார் உள்ளிட்ட நடிகர்கள் போட்டிடயிட தயாராகி வருகிறார்கள்.

இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் தீவிரமாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும்- எம்.பி.- எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர்.

இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது.

ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வரூடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது.

நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார். ரஜினிகாந்த் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்சாகுமாரும் நாடாளுமன்ற தேர்தலில் டில்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் .

நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான  ரித்தேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியால் போட்டியிட முயற்சிக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker