Latestமலேசியா

நாடு தழுவிய அளவில் பொங்கல் விழா! மக்கள் உற்சாகம்!

கோலாலம்பூர், ஜன. 14 – நாளை பொங்கல் திருநாளுக்காக நாடு தழுவிய அளவில் மலேசிய இந்தியர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். பொங்கலுக்கு அத்தியாவசியமான புதுப்பானை, கரும்பு, மஞ்சள் என்று பல்வேறு பொங்கல் பொருள்களை வாங்குவதில் அவர்கள் மும்முரம் காட்டினர்.

பொங்கல் திருநாளுக்கு பொது விடுமுறை கிடையாது. எனினும், பொங்கல் மலேசியர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்து வருகிறது. தமிழர்களின் தொண்மையும் பாரம்பரியமும் மிக்க இந்தப் பொங்கல் திருநாள், தொன்மைய உழவுத் தொழிலுக்கு நன்றி கூறும் வகையிலான ஒரு நன்னாள் என்பது அனைவரும் அறிந்ததே.

அண்மைய சில ஆண்டுகளாக பொங்கல் திருநாள் மலேசிய இந்தியர்களின் ஒற்றுமைத் திருநாளாக மாறி வருகிறது. புதிய உத்வேகம் பெற்று, அவர்களின் முதன்மை திருநாளாக அது பரிணமிக்கத் தொடங்கி உள்ளது.

நகர்ப் புறங்களானாலும் சரி, மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவதை பெருமையாக கருதத் தொடங்கி விட்டனர். இந்த விழாவில் இளைய தலைமுறையினரும் அதிக ஆர்வம் காட்டுவதே, அதன் பிரபலம் உயர்ந்து விற்பதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

சமூக இயக்கங்கள், இந்தப் பொங்கல் நாளை மக்களிடையே ஊக்குவிக்கும் பணி வெகுகாலமாகச் செய்து வருகின்றன. எனினும், மலேசியாவில் பொங்கல் விழாவின் சிற்ப்பு இப்போது மேலோங்கி வருவதற்கு, இன்றைய சமூக ஊடகங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சமூக ஊடகங்களில், வலைத் தளவாசிகள் தொடர்ந்து அண்மைய ஆண்டுகளாக பொங்கலின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு பதிவுகளைச் செய்து வந்துள்ளன.

அதுமட்டும்மின்றி, தங்களின் வீடுகளில் இடம் பெறும் பொங்கல் குறித்து படங்களுடன் இளைய தலைமுறையினர் முகநூல்களில் பதிவிட்டு, மகிழும் சூழல் தான் இதன் இப்போதைய பிரபலத்திற்கு அடித்தளமாகும்.

‘இது எங்க வீட்டுப் பொங்கல்’ என்று அவர்கள் பெருமையான வாசகங்களுடன் தங்களின் இல்லங்களில் நடக்கும் பொங்கல் விழாவை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.

இப்படி பொங்கலைப் பற்றி பதிவுகள் போட்டி போடத் தொடங்கி இப்போது மலேசியாவில் பொங்கலின் புகழ் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

வேலை நாளாக இருந்தாலும் தங்களால் இயன்றவரையில் பொங்கலை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கோலாலம்பூர் போன்ற மாநகரங்களில் கூட, வீதிக்கு வீதி கரும்பு விற்பனை களைகட்டி விட்டது. மஞ்சள் கொத்து விற்பனையும் மகிழ்ச்சி அளிக்கிறது. புதுப் பானைகளும் அதிக அளவில் விற்பனை ஆகின்றன
.
நாளை காலை சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 7.30 மணி முதல் 10.25 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் வேலைக்குச் செல்வோர், மாலையில் வீடு திரும்பும் பட்சத்தில் மாலை 6 மணி முதல் 7.25 மணிவரையில் பொங்கல் வக்க உகந்த நேரமாகும். மேலும் நாளை நாடு தழுவிய அளவில் ஆலயங்களிலும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் இடம் பெறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker