Latestஉலகம்

புடினுடன் இரகசிய பேச்சு: டிரம்பின் செயலால் சர்ச்சை!

வாஷிங்டன், ஜன.14, அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துப் பேசியதாக  வெளியான  சர்ச்சைக்குரிய  செய்தி குறித்து விளக்கமளித்த அதிபர் டிரம்ப், அந்தச் சந்திப்பு பற்றி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2 ஆண்டுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்து விட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி பிரசுரித்து இருந்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டியளித்த போது அவரிடம் இவ்விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட து.

அது ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை. நான் எதையும் மறைக்க வில்லை. நான் அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் தனியாக தான் பேச்சு வார்த்தை நடத்துவேன். பிரதிநிதிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அது பற்றி யாரும் எதுவும் கூறியது கிடையாது. ரஷ்யாவுடன் எந்த வித கூட்டணி யும் இல்லை என்பதை அனைவரும் அறிவர் இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்த விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker