Latestசினிமா

வெள்ளித் திரையில் இருந்து வானொலிக்கு தாவுகிறார் கரினா கபூர்!

மும்பை ஜன.14-பலர் வானொலி தொலைக்காட்சியில் புகழ்பெற்ற பின் தான் சினிமாவுக்கு செல்வார்கள். ஆனால் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் வெள்ளித் திரையில் பிரகாசிக்கும் வேளையில் வானொலிக்கு வந்திருக்கிறார்.

‘வாட் விமன் வாண்ட்’ பெண்களுக்கு எது தேவை’- என்ற நிகழ்ச்சியில் மூலம் எப்எம் ரேடியோவில் கரீனாவின் குரல் தொடர்ந்து ஒலிக்கப் போகிறது. அதுபற்றி அவர் கூறியதாவது:

இன்று எந்த ஊடகம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது திரைப்படமாக இருக்கலாம். தொலைக்காட்சியாக இருக்கலாம். கொடுக்கும் விஷயம் தரமாக இருக்கிறதா? என்பது தான் முக்கியம்.

இந்த ரேடியோ நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த போது அதன் மையக் கருத்து எனக்கு பிடித்திருந்தது உண்மையில் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பது குறித்து எந்த ரேடியோ நிகழ்ச்சியும் இதுவரை இடம்பெற்றதில்லை.

இந்தக் கருத்தை உயர்த்தி பிடித்து ஒரு நிகழ்ச்சி தயாரிப்பது, இன்றைய சூழலுக்கு அவசியமானது .உள்ளுணர்வின் விருப்பப்படி நான் இந்நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டேன்.

ரேடியோவில் நாங்கள் விவாதிக்கும் பல விஷயங்களில் எனக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. எங்கம்மா பபிதாவாகட்டும் சகோதரி கரீஷ்மா கபூராகட்டும் எங்கள் குடும்பத்தில் எல்லா பெண்களும் சுதந்திரமானவர்கள். நாங்கள் விரும்பியதை செய்திருக்கிறோம்.

எனவே இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நான் பொருத்தமான தேர்வு தான். இடையிடையே என் கருத்துக்களையும் வெளியிடுவேன். அதனால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும். என்று என்னால் நம்பமுடிகிறது.

ரேடியோவில் நாங்கள் விவாதிக்கும் எல்லாமே முக்கியமானது அல்ல.வேடிக்கை விஷயமும் உண்டு. இதில் சுவாரசியமான விவாதங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உதாரணமாக நான் இன்னொரு நடிகை யுடன் பேசுகிறேன் என்றால் நாங்கள் எப்படி பேசுவோம் . எங்கள் நட்பு எவ்வாறு இருக்கிறது என்பதுல்லாம் ரசிகர்களுக்கு தெரியாது அல்லவா. இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker