Latestமலேசியா

16 வயது சகோதரி கற்பழிப்பு: குற்றத்தை ஒப்பினான் 14 வயது சிறுவன்!

கம்பார், ஜன.14- தனது 16 வயது சகோதரியுடன் முறையற்ற பால் உறவை வைத்துக்கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவன் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.

சமூக நல இலாகாவின் அறிக்கைக்காக காத்திருப்பதால், அச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் எவ்வித தீர்ப்பையும் விதிக்கவில்லை.

அந்தத் தகாத உறவின் வாயிலாக, பாதிக்கப் பட்ட அச்சிறுமி, கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியன்று குறைமாத பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வழக்கு விசாரணை நடைபெறுவதை நேரில் காண ஊடகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அச்சம்பவம் தொடர்பிலான அறிக்கையை பெறும் பொருட்டு, அவ்வழக்கை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக மாஜிஸ்திரேட் நூர் ஃபைஸா அறிவித்தார்.

இங்குள்ள தாமான் டியாவான் என்ற குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அவ்விரு உடன்பிறப்புகளும், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, 2018-ஆம் ஆண்டு மே மாதம் வரை, அத்தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் 376பி (1)-ஆவது பிரிவின் கீழ் அச்சிறுவன் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. அச்சிறுவனின் குற்றம் நிரூபனமானால், அவனுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப் படும்.

கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியன்று, பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட அந்த 16 வயது சிறுமி, தனது வீட்டின் கழிவறையில் குறைமாத குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார்.

கழிவறையில் விழுந்ததால், அந்தக் குழந்தைக்கு தலைப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாம் கருவுற்றிருந்ததைக் கூட அந்தச் சிறுமி அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker