Latestமலேசியா

60 ஆண்டுகள் கடந்து விட்டன: நாம் இன்னமும் ஒன்றுபடவில்லை! -மகாதீர்

புத்ராஜெயா, ஜன.14- சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும் மலேசியர்கள் இன்னமும் உண்மையான ஒற்றுமையை எட்டவேயில்லை. ஒவ்வொரு இனத்தினரும் தங்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து கட்டிக் காக்கவே விரும்புகின்றனர் என்று பிரதமர் துன் மகாதீர் அறிவுறுத்தினார்.

மக்கள் தங்களை ஒரே இனம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு நாடாக நாம் விளங்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றார் அவர்.

எனவே, அரசியல் கட்சிகள் என்ற முறையில் நாம் அரசு நிர்வாகத்தில் அனைத்து இனங்களும் பங்கேற்பதை உறுதி செய்வோம். இதனால், நாட்டில் ஓவ்வொரு தரப்பும் தனது பிரதிநிதித்துவத்தை பபெறமுடியும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

பிரிட்டீஷாரிடமிருந்து மலேசியா எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை அறிந்து, அரசாங்க ஊழியர்கள் அனைவரும் அதனைப் போற்றக் கற்றுக் கொள்ளவேண்டும்.

நாம் நமது சுதந்திரத்திற்காக போரில் குதிக்கவில்லை. அந்த வகையில் நாம் அதிர்ஷ்டசாலிகள். நம்மவர்களில் பலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பயிற்சி பெற்று, பணிபுரிந்தவர்கள். நாட்டை எவ்வாறு நிர்வகிப்பத்தில் அவர்களுக்கு அனுபவம் உண்டு என்று அவர் சொன்னார்.

பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தவரை யாரும் ஓரம் கட்டப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker