Latestஉலகம்

விமானம் விழுந்து நொறுங்கியது: 15 பேர் உயிரிழப்பு!

தெஹ்ரான், ஜன.15- ஈரானில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் பலியாயினர்.

கிர்க்கிஸ்தான், பிஷ்கெக் நகரில் இருந்து போயிங் 707 ரக சரக்கு விமானம் ஒன்று ஈரானுக்கு புறப்பட்டு வந்தது. அதில் விமானிகள் உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்துள்ளனர்.

அந்த சரக்கு விமானம் ஈரானில் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது மோசமான வானிலை காரணமாக ஓடு தளத்தில் இறங்குவதற்கு முன்பாக கம்பி வேலியில் மோதி விபத்துக்கு உள்ளானது.

தரையில் விழுந்து நொறுங்கியதும் விமானம் தீப்பிடித்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 15 பேரும் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker