Latestமலேசியா

அறிமுகம் கண்டது பெரோடுவா அருஸ்!

கோலாலம்பூர்,ஜன.16- பெரோடுவா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பெரோடுவா அருஸ்’ SUV கார்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து இதுவரையில் 2,200 அளிப்பாணைகள் பெறப்பட்டுள்ளன.

உலக அளவில் தனது SUV ரக கார் தயாரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த பெரோடுவா அருஸ் காரை பெரோடுவா தயாரித்து வெளியிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான டத்தோ சைனால் அபிடின் அகமட் தெரிவித்தார்.

பார்ப்பதற்கு அழகாகவும், விசாலமாகவும் இருப்பதால் மக்களுக்கு இந்த காரை மக்களுக்கு பிடித்திருப்பதாக அவர் சொன்னார். இந்த காரில் 7 பேர் தாராளமாக அமரலாம்.

பெரோடுவா அருஸ் கார் நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. இக்காரை, மலேசியாவுக்கான ஜப்பானிய தூதர் டாக்டர் மாக்கியோ மியாகாவா உடன் இருக்க அனைத்துலக வாணிப-தொழிலியல் அமைச்சர் டத்தோ டேரல் லெய்கிங் வெளியீடு செய்து வைத்தார்.

இந்தக் கார் இரண்டு ரகமாக வெளியாகியுள்ளது. ஒன்று 1.5 எக்ஸ். மற்றொன்று 1.5 அட்வான்ஸ். 1.5 எக்ஸின் விலை 72 ஆயிரத்து 900 ரிங்கிட் என்றும், 1.5 அட்வான்ஸின் விலை 77 ஆயிரத்து 900 ரிங்கிட் ஆகும்.

மேலும், ஐவரி வைட், கிலிட்டரிங் சில்வர், எலெக்ரிக் புளூ, கிரேனைட் கிரேய், அமேசோன் கிரிண் என்று ஐந்து வர்ணங்களில் இந்தக் கார் அறிமுகம் கண்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker