Latestவாழ்க்கை

இந்தியா முழுவதும் ஒரே நேர்க் கோட்டில் 8 சிவாலயங்கள்: நீடிக்குகிறது மர்மம்!

மும்பை, ஜன.16- இந்தியா முழுவதும் ஒரே நேர்க் கோட்டில் 8 சிவாலயங்கள் அமைந்துள்ளன என்ற அபூர்வமான விஷயத்தை சிலர் இதை அறிந்திருக்கலாம். சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் ஆன்மிக அம்சமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும் இந்தியாவில் ஒரே நேர்க்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

மிகக் கச்சிதமாக, ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் இதை எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்திலிருந்து- ராமேஸ்வரம் வரை நேர்க்கோட்டில் கோவில்களை எப்படி அந்தக் காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

1. நிலம்- காஞ்சிபரம்-ஏகாம்பரநாதர் கோயில்,
2. நெருப்பு- திருவானைக்காஅண்ணாமலையார் கோவில்,
3. நீர்- திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில்,
4. ஆகாயம்- சிதம்பரம் நடராசர் கோயில்,
5. காற்று- திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

மேற்கண்ட சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களான இந்தக் கோவில்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். அப்போது எந்தொவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பஞ்ச பூத ஸ்தலங்கள் மட்டுமின்றி, இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்க்கோட்டிலான தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது வியப்பான அம்சமாகும்.

கேதார்நாத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாள 2,383 கிலோமீட்டர் ஆகும். இவ்வளவு தூர இடைவெளியில் அமைந்திருக்கும் இந்தச் சிவாலயங்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திப்பதன் மர்மம் நீடிக்கிறது.

1) கேதார்நாத் – கேதார்நாத் ஆலயம்
2) காலேஷ்வர்- காலேஷ்வரா-முக்தீஷ்வரா ஆலயம்
3) ஶ்ரீ காலஹஸ்தி- ஶ்ரீ காலஹஸ்தி ஆலயம்
4) காஞ்சிபுரம் -ஏகாம்பரநாதர் ஆலயம்
5) திருவானைக்கால் -ஜம்புகேஸ்வர் ஆலயம்
6) திருவண்ணாமலை- அண்ணமைலையார் அலயம்
7) சிதம்பரம் – நடராஜர் ஆலயம்
80 இராமேஸ்வரம்- இராமநாதர் ஆலயம்

இதனிடையே கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரையில் இன்னும் பல ஆலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கலாம் என்பதால் அது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker