Latestமலேசியா

கேமரன்மலை: வெற்றி எளிதல்ல! – மனோகரன்

கேமரன்மலை, ஜன.16 – கடந்த நான்கு நாட்களாக கேமரன்மலை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம்.மனோகரன், இத்தொகுதியில் தாம் கடுமையான போரட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள் போலீஸ் அதிகாரி ரம்லி முகம்மட், தம்மைப் பொறுத்தவரையில் கடும் போட்டியைத் தரும் வேட்பாளர். கேமரன்மலைத் தொகுதியை கைப்பற்ற வேண்டுமானால் பக்காத்தான் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் என்று மனோகரன் சொன்னார்.

தனா ரத்தாவிலுள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுங்கை கோயான் குடியேற்றப் பகுதி மற்றும் பூர்வக்குடி மக்களின் பகுதிகளுக்கு தாம் பிரசாரத்திற்கு சென்ற போது மக்கள் வரவேற்பு அளித்தனர்.

எனினும், இதனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இன்னும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே இருமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவரான மனோகரன் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker