Latestமலேசியா

சுல்தான் அப்துல்லாவிற்கு புதிய பேரரசராகும் வாய்ப்பு

பெக்கான், ஜன.16- நேற்று பகாங் மாநிலத்தின் புதிய சுல்தானாக நியமிக்கப் பட்டதன் வாயிலாக சுல்தான் அப்துல்லா நாட்டின் அடுத்த பேரரசராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

நாட்டின் 9 மாநில சுல்தான்களும், நாட்டின் பேரரசராக பதவி வகிக்க சுழற்சி முறை நடப்பில் உள்ளது அதன் படி அடுத்த பேரசராக பதவி ஏற்கும் தகுதியை புதிய பகாங் சுல்தான் அப்துல்லா கொண்டுள்ளார்.

நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளந்தான், பகாங், ஜொகூர் மற்றும் பேரா மாநில சுல்தான்களுக்கு, முறையே பேரரசராக பதவி ஏற்கும் வாய்ப்பு சுழற்சி அடைப்படையில் வரும். அந்த வரிசைப் படி, நாட்டின் 15 ஆவது பேரரசர் பதவியை கிளந்தான் மாநில சுல்தான் துறந்த பின்னர், அந்தப் பதவியை ஏற்கும் பொறுப்பு, பகாங் சுல்தானுக்கு வழங்கப் படும்.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கவும், நாட்டின் 16-ஆவது பேரரசரை நியமனம் செய்யும் பொருட்டு, 24-ஆம் தேதியன்று ஆட்சியாளர்களின் மாநாடு நடைபெறவிருக்கிறது.

பகாங் மாநில சுல்தானாக இதற்கு முன்னர் பொறுப்பேற்றிருந்த சுல்தான் அகமட் ஷா உடல்நலம் குன்றி இருப்பதால், அவரால் பேரரசராக பொறுப்பேற்க முடியாது என்ற அடிப்படையில், பகாங் மாநில சுல்தான் பதவியை, அவரின் மூத்த புதல்வரான சுல்தான் அப்துல்லா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகாங் மாநில அரச கவுன்சில் முடிவெடுத்து, அதனை செயல்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker