Latestமலேசியா

பாலிங் எம்.பி. அஸீஸ் மீது 12 ஊழல் குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர், ஜன.16- தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவரும் நடப்பு பாலிங் எம்.பி.யுமான டத்தோஶ்ரீ அப்துல் அஸீஸ் மீது லஞ்ச ஊழல், நிதிமுறை கேடுகள் தொடர்பான 12 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

மேனுஞ்சு அசாஸ் சென். பெர்ஹாட் என்ற நிறுவனம் அரசாங்கக் குத்தகைகளைப் பெறுவதற்கு உதவியதற்காக அந்த நிறுவனத்திடமிருந்து மூன்று தவணைகளில் 52 லட்சம் ரிங்கிட் லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது முதல் 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம், கெடா மற்றும் பேராவில் சாலைக் கட்டுமானக் குத்தகைகளைப் பெறுவதற்கு அப்துல் அஸீஸ் உதவியுள்ளார். இந்தக் குத்தகைகளின் மதிப்பு 842.2 மில்லியன் ரிங்கிட் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மேலும் நிதிமுறைகேடுகள் தொடர்பாக 9 குற்றச்சாட்டடுக்கள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டன பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் நிதிமுறைகேடுகள் வழி இவர் பணம் பெற்றதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

நிதி முறைகேடு தடுப்புச் சட்டம், பயங்கரவாத நிதி தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் நிதி பெறுவதை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழும் எம்.ஏ.சி.சி. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் இவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவருக்கு உடந்தையாக இருந்ததாக இவரது மூத்த சகோதரரான அப்துல் லத்திப் என்பவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்துல் அஸீசுக்கு 8 லட்சம் ரிங்கிட் ஜாமின் நிர்ணயிக்கப்பட்டது. அவரது சகோதரர் அப்துல் லத்திப்புக்கு 5 லட்சம் ரிங்கி ஜாமின் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு மார்ச் 27ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

 

.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker