Latestமலேசியா

பெட்ரோலுக்கு பணமா? அந்தப் பெண்மணியிடம் MACC வாக்குமூலம் பதிவு!

கோலாலம்பூர், ஜன.16- கேமரன்மலை இடைத்தேர்தலில் தொண்டுழியர்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் டி-சர்ட் அணிந்து பணம் பட் டுவாடா செய்யும் காட்சியைக் கொண்ட புகைப்படத்தில் இருந்த பெண்மணி ஒருவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி. வாக்குமுலம் பதிவுசெய்துள்ளது.

நேற்றிரவு 7 மணி தொடங்கி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்தப் பெண்மணி, தானா ரத்தா எம்.ஏ.சி.சி. நடவடிக்கை அறையில் இருந்ததாக ஆஸ்ட்ரோ அவானி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி செய்தியாளர்களிடம் பேச மறுத்து முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றதாக அது கூறியது. பணம் பட்டுவாடா செய்வது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும், தேர்தல் வேலை செய்த தொண்டர்களுக்கான பெட்ரோல் செலவை ஈடுகட்ட அந்தப் பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், பெட்ரோலுக்கு பணம் தருவது கூட ஒரு வகையில் லஞ்சமே என்று அண்மைய தேர்தல் வழக்கில் நீதிபதி அளித்திருக்கும் தீர்ப்பை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் சுட்டிக்காட்டினார்.

முன்பு கேமரன் மலை எம்.பி.யாக இருந்த சிவராஜ் மீதான இந்த வழக்கில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சிவராஜின் எம்பி வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது கேமரன் மலைத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker