Latestஉலகம்

ஆசையோடு வளர்த்த பெண் விஞ்ஞானியை, கொன்று தின்றது 14 அடி முதலை!

மினாஹஸா, ஜன.17- இந்தோனிசியாவில் உள்ள ஆய்வகம் ஒன்றின் தலைவரான 44 வயதுடைய பெண் விஞ்ஞானி டெய்ஸி துவோ என்பவர், ஆசையோடு செல்லமாக 14 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை வளர்த்து வந்தார். அந்த முதலை அவரை கொன்று, அவரின் உடலின் பாகங்களை தின்று விட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கு சுலாவேசி பகுதியைச் சேர்ந்த டெய்ஸி (வயது 44), அந்த ஆய்வகத்தின் பகுதி ஒன்றில் அந்த முதலையை வளர்த்து வந்தார்.

தவறுதலாக அந்த முதலைக்கான தண்ணீர்த் தொட்டியில் அவர் விழுந்திருக்கக் கூடும் என்றும், அவ்வாறு தவறி விழுந்த டெய்ஸியை, அந்த முதலைக் கடித்து கொன்று தின்றிருக்கக் கூடும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலையால் கடிக்கப்பட்ட டெய்ஸியின் உடலை, அவருடன் வேலை செய்பவர்கள் கண்டெடுத்தனர் என்று பாதுகாப்பு அதிகாரியான ஹென்ரீக் ருண்டெகன் தகவல் தெரிவித்தார்,

அச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது” என்று அவர் சொன்னார். ‘மெர்ரி’ என்றழைக்கப் பட்ட அந்தச் செல்லப் பிராணியான முதலை, டெய்ஸியின் கைகளையும், அவரின் வயிற்றுப் பகுதியையும் தின்றுள்ளது.

“அவரின் உடல் பாகங்கள், அந்த முதலையின் வயிற்றுக்குள் இன்னும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று ஹென்ரீக் கூறினார்.

அந்த முதலைக்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டு, அது வளர்க்கப் பட்ட இடத்திலிருந்து வெளியேற்றப் பட்டது. சட்டவிரோதமாக வளர்க்கப் பட்ட அந்த முதலை, பின்னர் முதலைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker