Latestமலேசியா

கேமரன்மலை; தே.மு. வென்றால், நஜிப் மீண்டும் பிரதமர் ஆகலாம்! -கிட் சியாங்

கோலாலம்பூர், ஜன.17- கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், இழந்த பதவியை மீண்டும் கைப்பற்றலாம் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நம்புகிறார் என்று ஜசெக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் கூறினார்.

கேமரன் மலைத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை நிலை நாட்ட வேண்டும் என்ற அடிப்படையில், நஜிப் அங்கு நடைபெறும் பிரசார பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்றும், அத்தொகுதிக்கான தனது இரண்டு நாள் பயணத்தை அவர் நான்கு நாட்களாக அதிகரித்து உள்ளார் என்பதையும் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

நஜிப்பின் ஆட்சியின் கீழ் நிகழ்த்தப்பட்ட பல்வேறான ஊழல் சம்பவங்களை மறைத்து, தம்மீது சுமத்தப்பட்ட 39 குற்றவியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதற்காகவும், இழந்த பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றவும் நஜிப் முயற்சிக்கிறார் என்று இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரான கிட் சியாங் சாடினார்.

“நாட்டின் 15-ஆவது பிரதமராக மீண்டும் தாம் நியமிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்தில், கேமரன் மலை இடைத் தேர்தலில், நஜிப் அதீத ஆர்வம் காண்பித்து வருகிறார்.

15-ஆவது பொதுத் தேர்தலின் வாயிலாக நஜிப் மீண்டும் பிரமராக தேர்ந்தெடுக்கப் பட்டால், அவருக்கான சிறைத் தண்டனைகளிலிருந்து அவர் எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்” என்று லிம் கிட் சியாங் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker