Latestமலேசியா

தேடினேன்..தேடினேன்.. கேவியஸின் வீட்டை எங்கும் காணவில்லை!- சிவராஜ் கிண்டல்

கேமரன் மலை,ஜன.17- கேமரன் மலையில் உள்ள மைபிபிபி தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸின் வீட்டை தாம் தேடி அலைந்ததாக அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

“நான் கேவியஸின் வீட்டைத் தேடி அலைந்தேன். அவரது வீடு எங்குத் தான் இருக்கிறது என்று தெரியவில்லை.

“8 மாதங்களாக கேமரன்மலையில் எம்பியாக இருந்திருக்கிறேன். ஆனால், கேவியஸின் வீடு இங்கு இருப்பதாக எனக்கு தெரியவே தெரியாது” என்று நேற்றிரவு ரிங்லெட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டபோது சிவராஜ் கூறினார்.

இதற்கு முன்னதாக, கேமரன்மலை மக்கள் பிரதிநிதியாக மஇகா வேட்பாளருக்குத் தகுதியில்லை; கேமரன்மலை தமது ஊர் என்றும், அதனால் அத்தொகுதியைப் பற்றி தனக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று கேவியஸ் கூறி இருந்ததை அடுத்து சிவராஜ் இவ்வாறு கேலி செய்தார்.

“இதுவரை வெளியூரைச் சேர்ந்த வேட்பாளர்கள்தான் கேமரன்மலையில் போட்டியிட்டனர்; அத்தொகுதியையும் தங்கள் வசமாக்கினர். அதனால், கேவியஸுக்கு தேசிய முன்னணி வேட்பாளரை பற்றி பேச தகுதியில்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில், கேவியஸ் இங்கு வேட்பாளராக நின்றதும் இல்லை. வென்றதும் இல்லை” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker