Latestமலேசியா

தொழில் திறன் கல்வி வாய்ப்பு: விளக்கமளிக்க தைப்பூசத் திருத்தலங்களில் EWRF முகப்பிடங்கள்!

கோலாலம்பூர்,ஜன.17- அரசு சாரா இயக்கமான கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் (EWRF) 40 ஆண்டுகாலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், புதிய முயற்சியாக அரசாங்கம் நடத்தும் தொழில் திறன் பயிற்சிக் கூடங்களில் அதிகமான இந்திய மாணவர்களை சேர்க்க அவ்வியக்கம் இலக்கு கொண்டுள்ளது.

இடைநிலைப்பள்ளியை முடித்த இந்திய மாண்வர்களுக்கு தற்பொழுது அரசாங்க துறையில் கீழ் இயங்கும் தொழில் திறன் பயிற்சிக் கூடங்களில் பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இலவசமாக வழங்கப்படும் இந்த தொழில்திறன் பயிற்சிகளில் சேர்ந்து பயில மனிதவள அமைச்சும் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியமும் இணைந்து இந்திய இளைஞர்களை ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த திட்டத்தை  தைப்பூசத் திருவிழாவுக்கு பிரசித்திப்பெற்ற முக்கியத் திருத்தலங்களில் EWRF முகப்பிடங்களைத் திறக்கவுள்ளது. தொழில் திறன் கல்வியை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள விரும்பும் மாணவர்கள் அந்த முகப்பிடங்களுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கெர்லிங், பினாங்கு தண்ணீர்மலை, பத்துமலை, ஈப்போ கல்லுமலை, புக்கிட் பாசிர் மூவார் போன்ற இடங்களில்  EWRF முகப்பிடங்கள் செயல்படும். மேல் விவரங்களுக்கு 03-77100140 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker