Latestமலேசியா

பூர்வக் குடிகளின் நலன்கள்: சுஹாகாம் பரிந்துரை பரிசீலிக்கப்படும்! -வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஜன.17- பூர்வக்குடி மக்கள் நலம் குறித்து மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி உறுதி அளித்தார்.

சுஹாகாம் தலைவர் டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயிலுடன் டத்தோ மா வெங் குவாய், டத்தோ லோ யிம் பென், பிரான்சிஸ் ஜோஹென், ஜெரால்ட் ஜோசப் உள்ளிட்ட ஆணையர்கள் கடந்த புதன்கிழமை அமைச்சரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தபோது மேற்கண்டவாறு உறுதி அளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய நில உரிமை, கல்வி வளர்ச்சி, சமூகத்தில் பூர்வக்குடி மக்கள் தொடர்பான தாக்கம் குறித்து சுஹாகாம் ஆணையர்கள் அமைச்சர் வேதமூர்த்தியுடன் கலந்துரையாடினர்.

பூர்வக்குடி மக்களின் மேம்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மனித உரிமை ஆணையத்திடம் வேதமூர்த்தி உறுதி அளித்தார்.

அத்துடன், ‘தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம்’ கடந்த அக்டோபர் மாதத்தில் பொதுமக்களின் கருத்தறிவதற்காக வெளியிட்ட நகல் திட்டம் குறித்தும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் வேதமூர்த்தியிடம் சுஹாகாம் ஆணையர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker