Latestமலேசியா

இரவுநேர கேளிக்கையா? அழகி பட்டத்தை இழந்த ஹனிஷா!

கோலாலம்பூர்,ஜன.18- “தேவி ரெமாஜா” (Dewi Remaja) அழகு ராணியாக மகுடம் சூட்டப்பட்ட ஹனிஷா ஹனி, 72 மணி நேரத்திலேயே அந்தப் பட்டத்தை இழந்தார்.

கேளிக்கை மையம் ஒன்றில் ஹனிஷா மதுபான கோப்பையோடு இருக்கும் காணொளி வைரல் ஆனதை அடுத்து, அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்ட அழகுராணி பட்டத்தை மீண்டும் மீட்டுக்கொண்டது நேற்று பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தனக்கு சூடப்பட்ட மகுடம், வெற்றிக் கேடயம், மாதிரி காசோலை அனைத்தையும் திரும்ப வழங்கினார்.

இந்நிலையில், தனது தவற்றை உணர்ந்த ஹனிஷா மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தனது பட்டம் பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்றும் அவர் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker