Latestஉலகம்

கடற்கரையில் நடந்து வந்த முதலை! அலறியடித்து சிதறி ஓடிய மக்கள்! -(Video)

சந்தா மரியா, ஜன.18- கடற்கரையில் ஜாலியாக பொழுதைப் போக்க வந்த மக்கள் முதலை ஒன்று அங்கு காலாற நடந்து வருவதைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மக்களை வெளியேற்றுவது மக்களின் பாதுகாப்புக்காக மட்டும் அல்ல,. முதலையின் பாதுகாப்புக்காகவும் என்று அதிகாரிகள் கூறினர்.

கொலம்பியாவின் வட பகுதியில் சந்தா மரியா என்ற இடத்தில் டைரோனா தேசிய பூங்காவுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இந்தச் சம்பவம் நடந்தது.

பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் முதலை வருவதை அறிந்து கொண்டு அலறியடித்து மக்கள் ஓட்டம் பிடிக்க, சிலர் எங்கிருந்து முதலை வருகிறது என்றே தெரியாமல் முதலையின் அருகிலேயே ஓடி வருவது தெரிந்தது.

ஒருவேளை அவர்கள் முதலை மீது தவறி விழுந்திருந்தால் முதலையால் தாக்கப் பட்டிருக்கலாம். இந்நிலையில், வன விலங்குகள் நல அதிகாரிகள் மக்களை முற்றாக அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர்.

அந்த கடற்கரை அமைந்துள்ள இடம், மக்களுக்காக மட்டுமின்றி வன விலங்குகளைக் காப்பதற்காகவும் தான் என்று அதிகாரிகள் தெரிவித்ததோடு, முதலை ஒன்றை அங்கு காண்பது உண்மையில் நல்ல விஷயம் தான் என்று கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker