Latestமலேசியா

கெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த “போர்ஷே” கார்!

ஷா ஆலாம்,ஜன.18- நேற்று கெசாஸ் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போர்ஷே கெயன் (Porsche Cayenne) என்ற ஓர் ஆடம்பரக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அந்தக் கார் 80 விழுக்காடு தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டது.

புத்ராவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அக்காரின் டேஷ்போர்ட்டில் (dashboard) இருந்து புகை வெளியாகவும், அதன் 50 வயது ஓட்டுநர் உடனடியாக காரை சாலையின் அவசரப் பாதையில் நிறுத்தி இருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காலை 11.05 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக ஶ்ரீ அண்டாலாஸ் தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைவர் ரோம்ஸி அபு தெரிவித்தார்.

அக்காரில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு 20 நிமிடங்கள் பிடித்ததாக அவர் கூறினார். இச்சம்பவத்தில், உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker