Latestமலேசியா

கேமரன்மலை: வாக்குச் சீட்டு அம்பலம்! தேர்தல் ஆணையம் போலீஸ் புகார்

தானா ராத்தா, ஜன.18- கேமரன் மலைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப் பட்டதை தொடர்ந்து, அவ்விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் போலீஸ் புகார் செய்துள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் தகவல் தொலை தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சிடமும் புகார் செய்யவிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் அஸார் அஸிஸான் ஹரூண் சொன்னார்.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதியன்று, அஞ்சல் வாயிலாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப் பட்டன. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் போலீஸ் புகார் செய்துள்ளது.

“வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்களை பகிர்வது சட்டப்படி குற்றமாகும். வாக்களிப்பு நாட்களுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் அந்த வாக்குச் சீட்டுகளை வெளியிட்டுள்ளது என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். அதுவும் சட்டப்படி ஒரு குற்றமாக கருதப் படுகிறது” என்று ஹரூண் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

கேமரன் மலை இடைத் தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை பொதுமக்கள் வெளிப்படையாக தெரிவிக்காமல், தங்களின் வாக்குகளை முறையாக பதிவு செய்து தங்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker