Latestமலேசியா

மார்ச் 2-இல் செமினி இடைத்தேர்தல்!

புத்ராஜெயா,ஜன.18- அண்மையில் காலியாக செமினி சட்டமன்றத் தொகுதியில் மார்ச் 2-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அஸார் அஸிஸான் ஹருண் அறிவித்தார்.

அதே வேளையில், அத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கம் பிப்ரவரி 16-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பு பிப்ரவரி 26-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

வேட்புமனு தாக்கலில் இருந்து தொடங்கி மார்ச் 1-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஜனவரி 11-ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமர் நோர் மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker