Latestமலேசியா

வாடகை வீட்டில் கொலை- கொள்ளை! நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு!

ஶ்ரீகெம்பாங்கான், ஜன.18- இங்கு தாமான் யுனிவர்சிட்டியிலுள்ள அடுக்குமாடி வாடகை வீடு ஒன்றில் 33 வயதுடைய பெண்மணி ஒருவர் இறந்து கிடந்தார். கொள்ளை அடிக்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

வீடு முற்றாகச் சூறையாடப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் உடல் நிர்வாணக் கோலத்தில் படுக்கையில் கிடந்ததாக செர்டாங் போலீசார் தெரிவித்தனர்.

பகுதி நேர வீட்டுப்பணிப் பெண்ணாக வேலைசெய்து வந்த ஜமிலா ஷாரி என்ற அந்தப் பெண், நேற்று நண்பகல் உணவு வேளையின் போது வீட்டுக்கு வந்ததை அடுக்குமாடி வீட்டில் இருந்த கண்ணிப்புக் கேமிராவில் பதிவு செய்துள்ளது.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது உறவுக்கார பெண் ஒருவர், வீட்டினுள் ஜமிலா இறந்து கிடப்பதையும் வீடு சூறையாடப்பட்டு பொருள்கள் களவாடப் பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகைகள், கைத்தொலைபேசி, ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து புலன் விசாரணையை தொடங்கியதாக செர்டாங் மாவட்ட போலீஸ் படைத்தலைவர் இஸ்மாடி போர்ஹான் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker